அரசு பயணத்தை சுற்றுலாப் பயணமாக்கிய முதலமைச்சர் : ஸ்டாலின் குற்றம் சாட்டு

அரசு சார்பில் சென்ற வெளிநாடு சுற்றுப்பயணத்தை, முதலமைச்சரும், அமைச்சர்களும் சேர்ந்து சுற்றுலாப் பயணமாக்கி விட்டதாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சொந்தத் தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதலமைச்சரும், அமைச்சர்களும் வெளிநாடு சுற்றுப் பயணத்தை, சுற்றுலாப் பயணமாக்கிவிட்டுத் திரும்பியிருக்கின்றனர் என்றார். நீர் நிலைகளை மேம்படுத்த மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணத்தை முதல்வர் மேற்கொள்ள இருப்பதை அ|வர் சுட்டிக்காட்டினார். சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு நீர் நிலைகள் தூர் வாருவதைக் கவனிப்பார்கள் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அடிக்கடி மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி|னார். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து 7 முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளதாக அவர் தெரிவித்தார். கொளத்தூர் -வில்லிவாக்கம் பகுதியை இணைக்கக்கூடிய எல்சி 1 பணிகளை ரயில்வே முடித்துள்ள நிலையில், மாநராட்சியும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

Related Posts