அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி: அமைச்சர் செங்கோட்டையன்

சமூக நலத்துறையுடன் இணைந்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருப்பதாக தெரிவித்தார். எல்.மோ என்னும் புதிய திட்டம் தமிழகத்தில் 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக ஜப்பான் நிறுவனம் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் தொடங்கவும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள் தொடங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், சமூக நல துறையுடன் இணைந்து எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Related Posts