அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி

சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த மையங்களில் பயிற்சி ஆரம்பமாகி உள்ளது. Etoos India என்ற பயிற்சி நிறுவனத்துடன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட இலவச நீட் பயிற்சி மையங்களில் விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Posts