அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் : கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ள கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நீட் மற்றும் ஜெஇஇ போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில்  தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts