அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

      தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம், கொண்டைக்கட்டு கிராமம் அருகே 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,சம்பவ இடத்திலேயே 40 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. 30 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் இருப்பதால் மீட்பு பணியில் தேக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிலர் வழியிலேயே உயிரிழந்தனர். மீட்பு பணியின் போது, மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொண்டைக்கட்டு பகுதியை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts