அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

கொடிய டெங்கு பாதிப்பில் இருந்து குழந்தைகளையும், மக்களையும் காப்பாற்ற தமி்ழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால், 2 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

சென்னையில் ரோஹித், மகாலட்சுமி என இரண்டு குழந்தைகள் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தது வேதனையையும், அதிர்ச்சியையும் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 30,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்க்கப்பட்ட நிலையில், 80 பேர் உயிரிழந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டெங்கு காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததற்கு அதிமுக அரசின் அலட்சியமும் மெத்தனமுமே காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். டெங்கு காய்ச்சல், அதன் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு திமுகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். டெங்கு பாதிப்பில் இருந்து குழந்தைகளையும், மக்களையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Posts