அரசு முறை பயணமாக ரஷ்யா செல்கிறார் மோடி

இரண்டு நாள் அரசு முறை பயணமாக, வரும் 4ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, கூடங்குளம் தவிர இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அனு உலைகள் அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விளாடிவோஸ்டாக்கில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கவுள்ள மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனிடையே, நியூயார்க்கில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.நா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27-ந்தேதி மோடி முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசு உள்ளதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி பேசியபிறகு இம்ரான்கான் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்பட பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தானின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனாலும் ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பற்றியும் விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரோஷி கடிதம் எழுதியுள்ளார். முக்கிய பிரச்சனைகள் பற்றிய பட்டியலில் காஷ்மீரை சேர்த்து விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஐ.நா.சபை இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

Related Posts