அரசு வரிவருவாயில் 70 விழுக்காடு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

தமிழக அரசின் வரிவருவாயில் 70 விழுக்காடு அரசு ஊழியர்களின் ஊதியத்திற்காகவே செலவிடப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;-

அரசாங்கத்தின் கஷ்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 14,000 கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 கமிட்டிகள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை. ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு 100 ரூபாய் வருவாய் என்றால், அதில் 70 ரூபாய் அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது. இதனைப் புரிந்துகொண்டு போராட்டக்காரர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

 

Related Posts