அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமல்

அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி : ஜூன்-01

ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை காலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஏப்ரல் 15 தொடங்கி ஜூன் 15 ம் தேதி வரையிலான தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1 முதல், ஜூலை 31 தேதி வரை தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளான முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளான கோவளம், ராஜக்காமங்கலம், முட்டம், நித்திரவிளை, நீரோடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகுகள்  துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts