அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம்

அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்கவுள்ளது.

கன்னியாகுமரி : மே-31

ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்து உள்ளது. இந்த தடை காலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஏப்ரல் 15 தொடங்கி ஜூன் 15 ம் தேதி வரையிலான தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1 முதல், ஜூலை 31 தேதி வரையும் தடைக்காலம் அமலுக்கு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளான முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

Related Posts