அரவக்குறிச்சியில் போட்டியிடும்  தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல் 

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம்  ஆகிய 4சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும்  செந்தில் பாலாஜி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இடைத் தேர்தல் நடைபெறும் 4தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாளாகும். மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று தமிழகத்தின் 22 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Posts