அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை  நேரில் சந்தித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று இரண்டாம் நாளாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பாலத்துறையில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை  ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் தவுட்டுப்பாளையம் சென்ற ஸ்டாலினை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். நடைபயணமாகச் சென்றபடி, கிராம மக்களை சந்தித்து செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஸ்டாலினுடன் பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தனது முதல்கட்ட பிரசாரத்தை இன்று நிறைவு செய்யும் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார். இரண்டாம் கட்ட பிரசாரத்தை மீண்டும் வரும் 14-ந்தேதி ஒட்டப்பிடாரத்தில் தொடங்குகிறார். 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 16-ந்தேதி சூலூரிலும் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் 17-ந் தேதி அரவக்குறிச்சியில் நிறைவு செய்கிறார்.

Related Posts