அரியலூர் அருகே மகள் தற்கொலைக்கு காரணமானவரை, கொலை செய்த தந்தை கைது 

அரியலூர் மாவட்டம்  இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தர் குமரவேல். இவர் விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த அவர், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில், குமரவேலுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆனந்தவள்ளி கடந்த ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த  ஆனந்தவள்ளியின் தந்தை ஏழுமலை, குமரவேலுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்து  போதை ஏறியதும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் குமரவேலின் உடலை தனது ஆட்டோவில் ஏற்றி சென்று செந்துறை பகுதியில் வீசிவிட்டு திரும்பிய ஏழுமலையிடம் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது குமரவேலை கொலை செய்ததை ஏழுமலை ஒப்புக்கொண்டார். இததையடுத்து ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts