தடுப்பணையை சரி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக-வினரை போலீஸார் கைது

மஞ்சிப்பள்ள ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை சரி செய்ய வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக-வினரை போலீஸார் கைது செய்தனர்.

குரும்பபாளையம் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தடுப்பணைகளை கட்டி தண்னீரை சேமிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. இதனை முன்வைத்து, தடுப்பணையில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் வரை நடைப்பயணமாக சென்ற மதிமுக-வினர் அதிகாரிகளிடம் மனு கொடுக்க முயன்றனர். போலீஸார் இதற்கு அனுமதி மறுக்கவே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

கோவை அறிவொளிநகர் பகுதியில் உருவாகும் மஞ்சிப்பள்ளம் ஆறு, குரும்பபாளையம், மதுக்கரை, வேலந்தாவலம் வழியாக கேரளா செல்கிறது. இந்த ஆற்றின் குருக்கே குரும்பபாளையம் பகுதியில் மட்டும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் சேதமடைந்துள்ளது. இதனால் அன்மையில் பெய்த மழை நீர் முற்றிலுமாக கேரளா சென்றது. எனவே உடைந்த தடுப்பணையை உடனடியாக சரி செய்வதுடன், கூடுதலாக தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதே மதிமுகவினர் முன்வைக்கும் கோரிக்கை.

Related Posts