அறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுமருத்துவமனை அருகே இருந்த பெரியார் சிலை கடந்த  8 ஆம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சேதபடுத்தப்பட்டது.  இதனை கண்டித்து  திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து  காவல்துறையினர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் சேதமடைந்த பெரியார் சிலை இரண்டுதினங்களுக்குள்  புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ரகுபதி,ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன்  மற்றும் கூட்டணி கட்சியினர்   மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர்

Related Posts