அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டமான கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு

ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் கருந்துளைகள் பற்றிய ஆய்வுகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது படம் எடுக்கப்பட்டுள்ள கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 5புள்ளி 5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650கோடி மடங்கு பெரியதாகும். 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக இந்த கருந்துளையை புகைப்படம் எடுத்திருக்கின்றனர். கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்ததன் மூலம்  200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருக்கின்றனர் என திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார்.இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஈவென்ட் ஹாரிசான் டெலஸ்கோப் என்பது உலகம் முழுக்க நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ டெலஸ்கோப்கள் எனவும்,  இதனாலேயே கருந்துளையின் நிழலை பதிவு செய்ய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். புதிய அறிவியல் புரட்சி ஆறு கட்டுரைகள் வடிவில் வானியற்பியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கருந்துளையின் முதல் புகைப்படம் கருந்துளை பற்றி பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சமர்ப்பணம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Related Posts