அவகோடா பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில்  புற்றுநோயை குணப்படுத்தும்,  அவகோடா  பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை போன்ற பகுதிகளில் அவகோடா  பழங்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றன. மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவகோடா பழம் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. இதில் கொழுப்பு சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி,  வைட்டமின் கே1,  வைட்டமின் பி6  மற்றும்  கார்போஹைட்ரேட்டுகள்  அடங்கியுள்ளன.

மூட்டுவலி, எலும்பு தேய்மானம், சிறுநீர்ப்பை உள்ள கற்கள் அகற்றுவது உள்ளிட்ட உபாதைகளுக்கு அவகோடா பழம் அருமருந்தாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்று நோய்ப்  போன்ற  கொடிய  நோய்  தாக்கியவர்கள்  அவகோடா  பழங்களை அதிகமாக உண்பதால்  நோய்  எதிர்ப்புத் தன்மையை  அதிகரித்து  புற்றுநோய் முற்றிலும் குணமாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவகோடா பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Related Posts