அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் மீது கப்லாங் தீவிரவாத குழு தாக்குதல்

நாகாலாந்து மாநிலத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் மீது கப்லாங் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

நாகாலாந்து : ஜூன்-18

நாகாலாந்து மாநிலத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த கப்லாங் தீவிவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில், 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 6 வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts