அ.தி.மு.க. க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகல்

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்றும் மக்களுக்கு இந்த கூட்டணியை பிடிக்கவில்லைஎன்றும் தெரிவித்தார். அதனால் பா.ம.க.வில் இருந்து விலகுவதாக கூறிய மணிகண்டன், காடு வெட்டி குரு பா.ம.க.விற்காக பாடுபட்டார் எனவும் ஆனால் அவரது கடனை அடைக்க கட்சித் தலைமை எதுவும் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. அமைச்சர் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியதை சுட்டிக்காட்டி, இது குறித்து அன்புமணி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை  என்று அவர் தெரிவித்தார். பா.ம.க.வை விட திராவிட கட்சிகளே மேல் என்ற மணிகண்டன், பா.ம.க.வில் இருந்துமேலும் பலர் விலக உள்ளதாக கூறினார்.

Related Posts