ஆகஸ்ட் 30-ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சனை ஒரு ஜனநாயக படுகொலை என்பதையும் கண்டிக்கின்ற வகையில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு கட்சி தொண்டர்கள் சால்வை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மீனாட்சிபுரம் மக்கள் 1983இல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பாக ஆய்வு செய்து இந்த முனைவர் பட்டம் பெற்றுள்ளதாக கூறினார்.

Related Posts