ஆசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி காலிறுக்கு முன்னேற்றம்

ஆசிய கால்பந்து போட்டியில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா அணி காலிறுக்கு முன்னேறியுள்ளது.

            ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடர் மலேசியால் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி குரூப் ‘சி’யில் இடம் பெற்றுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில், இந்தோனேசியாவுடன் இந்திய அணி மோதியது. இப்போட்டி கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிந்ததால், இந்திய அணி குரூப் சி பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.கடந்த 2002-ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts