ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஷிவ தபா  வெண்கல பதக்கம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 60 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்து இருந்தார். .இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த போபா-உஸ்மான் பேட்டுரோவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஷிவ தபா தோல்வியடைந்தார். இதனால் ஷிவ தபா வெண்கல பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.  ஷிவ தபா 2013-ல் தங்கப் பதக்கமும், 2015-ல் வெண்கல பதக்கமும், 2017-ல் வெள்ளி பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்இ பெண்களுக்கான 59 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மஞ்சு குமாரி வெண்கலத்திற்கான போட்டியில் வியட்நாம் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் 11க்கு 2 என்ற புள்ளிக் கணக்கில் மஞ்சு குமாரி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

 

Related Posts