ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ளாது

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ளாது என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

            இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று முடிந்து இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது.  இந்திய. அணி தோல்வியை சந்திக்காமலும், வங்காள தேசம் இரண்டு தோல்வியுடனும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.. சூப்பர் 4 சுற்றில் வங்காள தேசத்தை இந்தியா வீழ்த்தியுள்ளது. இருந்தாலும், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை இந்தியா எளிதாக எடுத்துக் கொள்ளாது என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், ‘‘வங்காள தேசம் அணி நிலையான அணி எனவும், அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரியும் எனவும் கூறினார். கடந்த சில ஆண்டகளாக அவர்கள் நன்றாக முன்னேற்றம் அடைந்து, தரமான அணியாக மாறியுள்ளனர் எனவும், பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts