ஆசிய போட்டி ஆடவர் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம்

ஆசிய போட்டி ஆடவர் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

ஆசிய விளையாட்டு போட்டியில் 11வது நாளில் ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர். 

கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய இந்திய வீரர் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ராகேஷ் பாபு 6வது இடம் பிடித்தார்.

Related Posts