ஆசிய போட்டி – இந்திய வீராங்கனை ரஹி சர்னோபட்டுக்கு தங்கம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டர் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபட் தங்கம் வென்றுள்ளார்.

                இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள், மனுபாகர், ரஹிசர்னோபட் ஆகியோர் விளையாடினர். இதில் ரஹி சர்னோபட், தாய்லாந்து வீராங்கனை யங்பைபூ ஆகியோர் ஒரே புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால், ஷூட் ஆஃப் முறையில் வெற்றியாளருக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சர்னோபட் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

                மகளிருக்கான 68 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் திவ்யா கக்ரன் சீன தைபே வீராங்கனை வென்லிங்கை வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளார். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்  என 11 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

Related Posts