ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் 

தற்காலிக ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகன்ங்கள் வழங்கும் விழாமாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 225 பெண்களுக்கு 56 இலட்சம் ரூபாய் மானிய விலையில் இருசக்கர வாகங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தற்காலிக ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts