ஆசிரியர் கண்டித்ததால் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சிறுவன்

ஆசிரியர் கண்டித்ததால் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அப்சர் அலி என்பவரது 13 வயது மகன் அப்துல் மாலிக், ஹைதராபாத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் படித்து வந்துள்ளான். பள்ளியில் சரியாக படிக்காத்தால் ஆசிரியர்கள் அவனை கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு  ரயில் ஏறி சென்னை வந்த அவன், பின்னர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி செய்வதறியாது நின்றுள்ளான். சிறுவனை மீட்ட போலீசார், பெற்றோரிடம் அவனை ஒப்படைத்தனர்.

Related Posts