ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பம்:  ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் 

தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தாளுக்கு 1,83,341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts