ஆசிரியர் தின வாழ்த்து : முதலமைச்சர்

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு தனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு என்கிற வள்ளுவர் வாக்கின்படி, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய ஒரு கருவி உண்டு என்றால், அது கல்வி தான் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்றால் அது மிகையாகாது என கூறியுள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும், தங்களுடைய மாணாக்கருக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து, சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு இதயங்கனிந்த “ஆசிரியர் தின” நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Related Posts