ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் குறித்து  சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் இதனைத் தெரிவித்தார்.  சமுக வலைதளங்களில் ஆட்சியர் மீது தொடர்ந்து தவறான கருத்துகளை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

மத மாற்றம் செய்யும் மத போதகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உடந்தையாக உள்ளதாகவும், தனியார் கட்டடங்களுக்கு முறையின்றி அனுமதி வழங்கியதாகவும், ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா மீது தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Related Posts