ஆட்சியாளர்கள் விமர்சிப்பது பற்றி கவலை இல்லை : மு.க. ஸ்டாலின்

நீலகிரி மழை, வெள்ள பாதிப்புகளை தாம் ஆய்வு மேற்கொண்டதை ஆட்சியாளர்கள் விமர்சிப்பது பற்றி கவலை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக சார்பில் 2வது நாளாக கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் அனுப்பி வைத்தார். நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் இன்று கேரளாவுக்கு சென்றடையும் என்று தெரிவித்தார். வேலூர் வெற்றிக்கு முழு காரணமும் திமுக மட்டும் தான் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், நீலகிரி மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டதை ஆட்சியாளர்கள் விமர்சிப்பது பற்றி கவலை இல்லை என்று தெரிவித்தார்.

Related Posts