ஆட்சியை பிடிக்க ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.100 கோடி விலை பேசுகிறது பாஜக

கர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சி அமைப்பதற்காக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு தலா 100 கோடி ரூபாய் விலை பேசுவதாக பாஜக மீது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகா : மே-16

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் தாமதத்ததால், கர்நாடகத்தில் பாஜக குதிரை பேரத்தை நடத்தி வருவதாக கூறினார். எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள பாஜக, ஒரு எம்எல்ஏவுக்கு 100 கோடி ரூபாயும், அமைச்சர் பதவியும் கொடுப்பதாக விலை பேசி வருகிறது என்று அவர் தெரிவித்தார். தங்களது கட்சி எம்எல்ஏக்களை இழுத்தால், பாஜகவில் இருந்து எம்எல்ஏக்களை இழுப்போம் என்றும் குமாரசாமி கூறினார்.

Related Posts