ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிதான் இடைத்தேர்தல்

ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிதான் இடைத்தேர்தல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ-வை அழைப்போம் என்றும், அவர் எங்களுடைய தோழர் என்றும் அழகிரி கூறினார். இடைத்தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று கூறிய அவர், அடிமை அரசாங்கத்தை ஒழித்து, மக்கள் ஆட்சியைக் கொண்டு வர பாடுபடுவோம் என்றார்.

இதனிடையே, கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் கட்சியினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வருகிற 23, 24-ந் தேதிகளில் விருப்ப மனு பெற்றுக்காள்ளலாம் என அறிவித்துள்ளார். விண்ணப்பக் கட்டணமாக ஆயிரம் ரூபாய்  செலுத்த வேண்டும் என்றும் அழகிரி கூறியுள்ளார்.

Related Posts