ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி – பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

இன்னும் இரண்டு முதல் ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.

வாணியம்பாடி, காமராஜபுரம், அழிஞ்சிகுளம் உள்ளிட்ட இடங்ககளில் அவர் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இன்னும் இரண்டு முதல் ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என்வும் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் வெற்றி பெற்ற மோடியால் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், வேலூர் தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது 100% உறுதி என்று கூறினார்.

Related Posts