ஆணி திருமஞ்சன விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாகலம்

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும் திருத்தேர் வீதி உலா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த இரு விழாக்களின் போதும் மூலவரே தேரில் எழுந்தருள்வது சிறப்பாகும். .இந்தாண்டிற்கான ஆனித் திருமஞ்சன விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாக சுந்தரி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய ஐவரும் தனித்தனித் தேர்களில் வலம் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர். தேர்கள் செல்லும் வழிகளெல்லாம், பெண்கள் வண்ணக் கோலமிட்டு சாமி தரிசனம் செய்தனர் .மேலும் தேர்த்திருவிழாவையொட்டி, பெண்களின் பரதநாட்டியம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை திருதேர் நிலைக்கு  வந்தடைந்ததும் அங்கு சமகால லட்சார்ச்சனை என்ற சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டுள்ளனர்.

Related Posts