ஆண், பெண் சரிசமம் : கிரண்பேடி

      சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆண், பெண் சரிசமம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

      புதுச்சேரியில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பற்கள் தாடைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம், மனிதர்களுக்குள்ளான வேறுபாடுகள் அகற்றுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வழிபாட்டை பொறுத்தவரைஆண், பெண் என பாகுபாடு காட்டக்கூடாது என அவர் கூறினார்

Related Posts