ஆதார் முற்றிலும் கைவிடப்பட வேண்டும்

ஆதார் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது. உச்சநீதிமன்றம் இரண்டு முக்கியமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது எனவும்,  ஆதார் அட்டை தொடர்பாக வழங்கிய தீர்ப்பு ஏற்புடையதல்ல எனவும் கூறினார்.ஆதார் முற்றிலுமாக கைவிட வேண்டும் என 5வது நீ நீதிபதி சந்திர சூட் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.  பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, 2006ஆம் ஆண்டு நாகராஜ் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தலித் மக்களுக்கு எதிரானது எனவும், அது தொடர்பான மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள அரசியல் சாசன அமர்வு, ஒருபுறம் பதவி உயர்வில்இடஒதுக்கீடு அளிப்பது சரி எனவும், இன்னொருபுறம் அதில் கிரிமிலேயர் முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியிருப்பதன் மூலம் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை  நிராகரிப்பதாக அமைந்திருக்கிறதுஎனவும் திருமாவளவன் கூறினார்.

Related Posts