ஆத்தூர் அருகே மூன்று கடைகளில் தீ விபத்து

ஆத்தூர்  அருகே அடுத்தடுத்த மூன்று கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையார்பாளையத்தில் உள்ள  அடுத்தடுத்த மூன்று கடைகளில்  இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து  நாசமாயின. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts