ஆத்தூர் குடிநீர் குழாய் உடைப்பு : பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகின

மேட்டூர் – ஆத்தூர் கூட்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேட்டூர் – ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம்  குடிநீர் வினியோகம் செய்கிறது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காமராஜர் சாலை, ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, லீபஜார் உள்ளிட்ட பிரதான இடங்களில் குடிநீர்  குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Posts