ஆந்திராவில் ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 15 பேர் பலி 

ஆந்திராவின் கர்னூல் நகரில் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்றும் வேனும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர்.  30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts