ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா : மே-16

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியதால், படகு ஆற்றில் கவிழ்ந்தது. படகில் பயணித்த சிலர் நீந்தி கரை திரும்பிய நிலையில், தண்ணீரில் மூழ்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த மீட்புப்படையினர், 17 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Posts