ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 17 தமிழர்கள் கைது

 

 

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே செம்மரம் கடத்தியதாக 17 தமிழர்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ராயசோட்டி சாலையில் வாகனங்களில் சென்றோரிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். செம்மரம் கடத்தியதாக 17 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் 17 பேரும் சேலம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related Posts