ஆந்திராவில் முழு அடைப்புப்போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே நேற்றுஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கைககளில் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஆந்திராவில் பின் தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தித்தர உதவ வேண்டும், அந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து அளித்து நிதி ஒதுக்க வேண்டும், தேசிய கல்வி நிறுவனங்கள் அமைத்துத்தர வேண்டும் , ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு  நிதி ஒதுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இந்நிலையில்,ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி ஆதரவுடன் நடக்கும் இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Posts