ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி, முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

ஏப்ரல்-20 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி, மத்திய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. 2 மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று 12 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கினார். விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி மைதானத்தில், சந்திரபாபு நாயுடு இன்று காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு ஆந்திராவை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார்.  

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts