ஆந்திரா, தெலுங்கான, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு

17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.. அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் , அனல் பறக்கும்  பிரசாரம் நேற்று  மாலையுடன் ஓய்ந்த்து. நாளை நடைபெறும் 91 தொகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Posts