ஆந்திர மக்களுக்கு தனியார் துறையில் 75 சதவீத வேலை வாய்ப்பு – ஆந்திர அரசு அதிரடி

தனியார் துறையில் 75 சதவீதவேலை வாய்ப்பை  உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை ஆந்திர மாநில அரசு  நிறைவேற்றியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார்அரசு பங்களிப்பு பெற்றஅரசு – தனியார் கூட்டுறவு தொழிற்சாலைகள் அனைத்திலும், 75 சதவிகித பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவரை கொண்டே நிரப்ப வேண்டும்என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கு தேவையான தகுதிகள் இல்லை என்றால்,  அந்த பணியாளர்களுக்கு மாநில அரசின் திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் பயிற்சி அளித்து பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,

பெட்ரோலிய பொருள்மருந்துஉரம்சிமெண்ட் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலின்போதுகொடுத்த வாக்குறுதியை இந்த சட்டத்தின் மூலம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றி உள்ளார்.

இதனிடயே மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் கடந்த 9-ஆம் தேதி அறிவித்த புதிய தொழிற் கொள்கையில்அந்த மாநிலத்தில் அரசிடம் இருந்து நிதி மற்றும் பிற உதவிகளை பெறும் தனியார் தொழிற்சாலைகள் அனைத்திலும் 70 சதவிகித பணியிடங்களை மத்திய பிரதேச தொழிலாளர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts