ஆந்திர மாநிலத்தில் அரசு மதுபானக் கடைகள் செயல்படும்

அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் அரசு மதுபானக் கடைகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திராவில் ஏல முறையில் தனியாருக்கு மதுக் கடைகள் மற்றும் பார் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மாற்றியமைத்துள்ளது. இது குறித்து பேசிய ஆந்தி சுங்கம் மற்றும் கலால்துறை அமைச்சர் நாராயணசாமி, புதிய கலால் சட்டத் திருத்தம், அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். இந்த சட்டத்தின்படி, மூவாயிரத்து 500 புதிய அரசு மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்றும், ஒப்பந்தம் முடிந்த 475 மதுக்கடைகளையும் அரசே நிர்வகிக்கும் என்றும் கூறினார். அரசு மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்று கூறிய அவர், பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் அருகே மதுக்கடைகள் செயல்படாது என்றும் உறுதியளித்தார். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் குறித்து மக்கள் புகார் அளித்தால் அந்த கடைகள் உடனடியாக அகற்றப்படும் என்றும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

 

Related Posts