ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

மக்களவை தேர்தலுடன் சேர்ந்து சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதி மீது அவரது உதவியாளர் கோட்டி என்பவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவர் 5 ஆண்டுகளாக லட்சுமி பார்வதியிடம் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும், கடந்த சில காலமாக லட்சுமி பார்வதி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் புகார் மனுவில் கோட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், புகாருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மூலம் லட்சுமி பார்வதி அனுப்பிய தகவல்களையும் காவல் நிலையத்தில் கோட்டி சமர்ப்பித்துள்ளார்.  இதனையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Posts