ஆன்லைன் திரைப்பட டிக்கெட்டிற்கான சேவைக் கட்டணம் மாற்றம்

ஆன்லைன் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணத்தை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து திரைப்படங்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ஆன்லைனில் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணம் குறைக்கப்படும் என கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் எத்தனை டிக்கெட்டுகள் பதிவு செய்தாலும், ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டம் இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts