ஆன்லைன் வணிகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால், சில்லறை  வணிகர்கள் பாதிப்பு

ஆன்லைன் வணிகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால், சில்லறை  வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக, வணிகர் சங்கப் பேரவைத்தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-14

சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், அமெரிக்க நிறுவனமாக வால்மார்ட், தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வணிகத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டார். வால்மார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளால் சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்த வெள்ளையன், மத்திய அரசு வணிகர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.  மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் வெள்ளையன் தெரிவித்தார்.

Related Posts